மு.இ. உமர் அலி-
ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரதுறை தூதுக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இக்குழு மக்களின் பொது சுகாதார விடயங்கள் பற்றி கள விஜயங்களை மேற்கொண்டு சேகரித்த விடயங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்று நேற்று (16.11.2015) திங்கட்கிழமை பிரதி சுகாதார போசாக்கு மற்றும சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பைசால் காசிம் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது, தமது அறிக்கையின் படி இனங்காணப்பட்டுள்ள குறித்த பகுதிகளில்; ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார சேவைகளுக்கு சமனான விடயங்களை இலங்கையில் அமுல் படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக தூதுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.


