ஏ.எல்.ஜுனைடீன் -
வரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் எல்லைப்புற கிராமங்களான ஆலங்குளம், கோனேசபுரம் ஆகிய பகுதிகளுக்கு கட்டார் சரிட்டி அமைப்பின் நிதி உதவியில் ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குடிநீர் கிணறுகள் ஈகாட்ஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈகாட்ஸ் நிறுவன நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி கலந்து கொண்டார். ஈகாட்ஸ் நிறுவனத்தின் குடிநீர் வழங்கள் திட்டத்தின் கீழ் 6ம் கட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.


