மூவின மக்களுக்கும் சமாந்திரமான சேவையை முன்னெடுப்பேன் - சுகாதார அமைச்சர் நஸீர்

அபுஅலா -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் தனது அமைச்சின் கடமைகளை நேற்று காலை (02) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சரும் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அமைச்சின் உதவிச் செயலாளர்களான ஜே.ஹூசைனுதீன், பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் திணைக்களத் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையில்,

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன். இந்த அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும் சுகாதார, சுதேச வைத்தியத்துறையை முன்னேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கான வைத்திய சேவையை செய்யும் வகையில் பாரிய பங்களிப்பைச் செய்யவுள்ளேன்.

இந்த அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள மூவினமக்களும் ஒரே பார்வையில் பார்க்கப்பட்டு மிகச் சமாந்திரமான முறையில் எனது சேவையை முன்னெடுப்பேன் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -