அவன்ட்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நாளை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வர்த்தக நிறுவனமான ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை அவன்ட் கார்ட் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவண்ட்கார்ட் கப்பலில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் உள்நுழைந்து விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
