லண்டனை தளமாகக் கொண்ட லெகட்டும் நிறுவனம், வெளியிட்டுள்ள 'செழுமை - 2015' சுட்டியில் இலங்கை உலகளவில் 61ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த சுட்டி தயாரிப்பு பெறுபேறில் பொருளாதாரம், தொழில் முனைவும் வாய்ப்பும், ஆட்சி முறை, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, உறுதிப்பாடு, தனியாள் சுதந்திரம் மற்றும் சமூக மூலதனம் என்பன கணக்கில் எடுக்கப்பட்டன.
இந்த ஆய்வில் 142 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
சமூக மூலதன உப - சுட்டியில் இலங்கை அதி சிறப்பாக 32ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றில் மிகவும் குறைவாக 113ஆவது இடத்தில் உள்ளது.
இந்த சுட்டியில் நேபாளம் 89ஆவது இடத்திலும் இந்தியா 99ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 103ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 141ஆவது இடத்திலும் உள்ளன.
நோர்வே, உலகளவில் அதியுயர்வான செழுமையான நாடு என தொடர்ந்தும் 7ஆவது தடவையாகவும் முதல் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.