வாகரை கேணிநகர் யூத் எய்ட் முன்பள்ளியின் 2015 மாணவர் வெளியேற்றுவிழா இன்று கேணி நகர் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் இடெம்பெற்றது.
ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் பூரன வழிகாட்டலில் முதன்முறையாக ஐந்து வருட நிறைவில் இத்தகைய விழா கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர் எஸ். ராஹுல நாயகி, கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வீ.கமலதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஈகாட்ஸ், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை, கேணி நகர் செவ்வந்தி மகளிரமைப்பு என்பன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனக்கான கட்டிடமோ, அடிப்படை வசதிகளோ இல்லாத போதும் இத்தகைய பாரிய நிகழ்வினை இம்முன்பள்ளி நடாத்தியமை அதிதிகளினால் பாராட்டப்பட்டது.


