பாதிக்கப்படும் வீடுகளுக்கு நஷ்டஈட்டின் தொகையை 01 இலட்சமாக அதிகரிக்க கோரி தனிநபர் பிரேரனை..!

சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டின் தொகையை 01 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க கோரும் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்பிப்பு

கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் அனர்த்தங்களினால் முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு நஷ்டஈடாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் 20,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகையினைக் கொண்டு அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். 

எனவே, எதிர்வரும் 2016ம் ஆண்டின் வரவு – செலவு திட்ட நிதியில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் அனர்த்தங்களின் போது முழுமையாக பாதிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை 01 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தனி நபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் எதிர்வரும் 24.11.2015ம்; திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -