டிடி TV தடை- டாண் TV காரணம்..?

யாழ்ப்பாணத்தினில் ஈபிடிபியால் இயக்கப்பட்டு வந்த டிடி தொலைக்காட்சி சேவை தடை செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகளினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒளிபரப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரனான தயானந்தாவினால் நிர்வகிக்கப்பட்டு வந்த தொலைக்காட்சி சேவை தொடர்பினில் போட்டி ஒளிபரப்பான டாண் தொலைக்காட்சி செய்த முறைப்பாட்டினையடுத்தே டிடி தொலைக்காட்சி தடை செய்யப்பட்டுள்ளது. கேபிள் மூலமாக இயக்கப்படும் இத்தொலைக்காட்சிகள் இரண்டும் பரஸ்பரம் தொடர்ந்தும் மேர்துண்டு வந்துள்ளன.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரா பங்காளராக கொண்டு குறித்த டாண் தொலைக்காட்சி இயங்கிவருகின்றது.டாணில் இத்தரப்புக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பினில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -