க.கிஷாந்தன்-
தலவாக்கலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த 9 மாணவர்களை தலவாக்கலை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி மென்பொருள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலே மேற்படி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டுக்கமைய இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இவர்களது வீடுகளிலிருந்து கணினி மென்பொருட்கள் பலவற்றையும் மீட்டுள்ளனர்.
இம்மாணவர்களை நாளை வியாழக்கிழமை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

