நிந்தவூரில் புதிய முயற்சி பெற்றோர்கள் அணிதிரண்டனர்..!

சுலைமான் றாபி-
நிந்தவூர் ஹிமா சமூக கலாச்சார ஒன்றியத்தினரால் நிந்தவூரில் காணப்படும் ஆரம்பப் பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்காக "பெற்றோர்களின் பொறுப்புக்களும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தலும்" எனும் தலைப்பின் கீழ் பெற்றோர்களை தெளிவு படுத்தும் விஷேட செயலமர்வு நேற்று (17) நிந்தவூர் அல் இஹ்சான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் ரி. இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வளவாளர்களாக உளவள ஆலோசகர் அஷ்ஷேஹ் என்.ஜி. அப்துல் கமால், அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எ.எல். பதுர்தீன் ஆகியோர்களின் பங்கு பற்றுதலுடன் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். சலீம், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டதோடு இதில் சுமார் 200க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

இச்செயலமர்வில் இடைவிலகல் செய்யும் மாணவர்கள் பற்றியும், அவர்களின் எதிர்கால நிலைமைகள் பற்றியும் தெளிவாக அறிவுத்தப்பட்டதோடு கல்வி நிலையில் பாடசாலைக் கல்வி தவிர்ந்த ஏனைய தொழில்நுட்பக் கல்விகல்விகளில் பெற்றோர்களின் பங்கு பற்றியும் வளவாளர்களால் அறிவுறுத்தப்பட்டமையானது அவர்களால் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்ட ஒரு விடயமாக அவதானிக்கப்பட்டது. 

அத்தோடு நிந்தவூரில் பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் பாலர் பாடசாலை மாணவர்களின் மீது அவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் சமூக கலாச்சார விழுமியங்களில் பெற்றோர்கள் செலுத்த வேண்டிய கவனங்கள் பற்றியும், அவர்களுக்கான அடிப்படை அறிவுகளை இலகுவாக வழங்கக் கூடிய வழிமுறைகள் பற்றியும் தெளிவுறுத்தப்பட்டது மிகமும் முக்கியமாக அமைந்த விடயமாகும். 

மேலும் சமூக கலாச்சார விடயங்களில் அக்கறை செலுத்தும் இவ்வாறான அமைப்புக்களின் மூலம் ஒரு சிறந்த ஆரோக்கியமுள்ள இளம் கல்வி சமுதாயம் ஒன்றினை ஒருவாக்கும் விடயங்கள் வெற்றியளிக்க இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வது நமது ஒவ்வொருத்தரின் கடமையாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -