எப்.முபாரக்-
சிரேஷ்ட ஊடகவியலாளர் சேனையூர் அ.அச்சுதன் எழுதிய பேச்சும் செயலும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும், கலாபுஷணம் சிவஷி அ.அரசரெத்தினம் (சேனையூர் ஷி நாகம்மால் ஆலய பிரதம குரு) அவர்களின் ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 28-10-2015 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை நகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கம், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் கு.குணநாதனும், கௌரவ அதிதியாக திருகோணமலை நகர சபையின் முன்னால் தலைவர் க.செல்வராசாவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பேச்சும் செயலும் கவிதை நூலின் முதற் பிரதியை வீரகேசரி பத்திரிகையின் திருகோணமலை முகாமையாளர் து.சஞ்சீவனும், ஏக்கம் கவிதை நூலின் முதற் பிரதியை சிவஷி.நா.செல்வரத்தினக் குருக்களும் பெற்றுக் கொள்வார்கள்.
பேச்சும் செயலும் நூலின் மதிப்பீட்டு உரையினை சிரேஷ்ட சட்டத்தரணி ஆ.ஜெகசோதியும்,ஏக்கம் கவிதை நூலின் மதிப்பீட்டு உரையினை ஓய்வு நிலை முதல்வர் கட்டைப்பறிச்சான் க.கனகசிங்கமும் நிகழ்தவுள்ளார்கள்.
வரவேற்புரையினை இளம் ஊடகவியலாளர் பா.விபூஷிதனும், நன்றியுரையை எழுத்தாளர் திருமதி உமாராஜன் பிரதீபாவும், நிகழ்வின் ஒருங்கினைப்பை கவிஞர் தி.பவித்திரனும் வழங்கவுள்ளனர்.