அட்டன் மற்றும் நோர்வூட் பகுதி மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயமுள்ள நோர்வூட் ரொக்வூட் தோட்டம் மற்றும் அட்டன் சமனலகம கிராமம் ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுனத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலய அதிகாரிகள் 19.10.2015 அன்று விஜயம் ஒன்று மேற்கொண்டு அங்கு பரிசோதனை செய்தனர்.

அந்தவகையில் அட்டன் சமனலகம பகுதியில் 12 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியிருப்பதாகவும், இதேவேளை நோர்வூட் ரொக்வூட் தோட்டப்பகுதியும் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியிருப்பதாகவும் இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் அங்கு வாழும் மக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மலையக பிரதேசங்களில் மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -