இலங்கை புடவை டெக்டைல் பயிற்சி நிறுவனத்தின் உற்பத்தி திறன் கூட்டம் ..!

அஸ்ரப் .ஏ. சமத்-
ர்த்தக கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ரத்மலானையில் உள்ள இலங்கை புடவை டெக்டைல் பயிற்சி நிறுவனம் இந்த நாட்டில் உள்ள நடுத்தர டெக்ஸ்டைல், அப்ரல் காமன் பெக்ரரிகளுக்கு சிறந்த பயிற்சியை அளித்து தலைசிறந்த நிறுவனமாக வளா்ச்சி பெற ஊக்கமளித்து வருகின்றது.

இந் நிறுவனத்தின் தலைவராக வா்த்க கைத்தொழில் அமைச்சின் மேலதிகச் செயலாளா் எம்.ஏ.தாஜீடீன் அமைச்சா் றிசாத் பதியுத்தீனால் நியமிக்கப்பட்டுள்ளாா். அத்துடன் பணிப்பாளா்களாக பொறியியலாளா் ஏ. ரெபட் வீ. பீரிஸ், மற்றும் பணிப்பாளா் பொறியியலாளா் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளனா். 

உற்பத்தி திறன் பற்றிய கூட்த்தில் புதிய தலைவரும் மேலதிகச் செயலாளருமான எம்.ஏ.தாஜூடீன் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தாவது 

இந் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் காமண்ட்ஸ், தொழில் ஈடுபடும் முகாமைத்துவ பணிப்பாளா்கள் தொட்டு அதில் சாதாரண தையல் ஊழியா்களை வரையிலானவா்களுக்கு டிப்ளோமா, மற்றும் சான்றிதழ் பயிற்சிகளை அளித்து இத்துறையில் மிகச் சிறந்த விற்பண்னா்காக மாற்றி வருகின்றது. 

அத்துடன் அமைச்சினால் 6 மாதத்திற்கு 10 மில்லியன் ருபாவை ஒதுக்கீடு செய்து சுமாா் 10 நடுத்தர காமன்ட்ஸ் பெக்டரிகளை தெரிவு செய்து இந்நிறுவனத்தின் புடவைத்துறை பொறியியலாளா்களை பெக்டறிகளுக்கு அனுப்பி சிறந்த முகாமைத்துவம். பயிற்சி மெசினரி, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி ஊழியா்களது பிரச்சினைகளை இனம் கண்டு சிறந்த ஒரு பயிற்சியை வழங்கி வருகின்றது. 

இதனால் இந்த உற்பத்தி மேலோங்கி வருகின்றது. அத்துடன் புடவை ஏற்றுமதி இறக்குமதி போன்ற துணிவகைகளை இங்கு மிகச் சிறந்த வசதிகள் கொண்ட ஆய்வு கூடத்தில் பரிசீலனை செய்து அரசுக்கு வழங்குகின்றது. தற்பொழுது சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பாடாசலை மாணவா்களது சீருடைகள் இங்கு பரீசீலித்த பின்னரே இறக்குமதி செய்து பாடாசலைகளுக்கு வழங்கப்படுகின்றது. அத்துடன் ரத்தமலானையில் உள்ள எங்களது நிறுவனத்தில் பல்வேறுபட்ட பயிற்சிகள் இத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இத்துறையில் பயிற்சிகளை பெற பாடாசலை விட்டு விலகியவா்கள் இத்துறையில் சம்பந்தப்பட்டவா்களை சோ்து சனி, ஞாயிறு மாதா மாதம் பயிற்சிகளையும் இந் நிறுவனம் வழங்குகின்றது. இதற்காக எமது அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தலைமையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் கடன் திட்டமொன்றை வழங்கி இத்துறையில் சம்பந்தப்பட்டவா்களை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இக் கூட்டத்தில் சமுகமளித்த காமன்ட்ஸ் பெக்டரிகளது முகாமைத்துவ பணிப்பாளா்கள் இந்த நிறுவனம் சிறந்த சேவையை வழங்குகின்றது. அதனால் எங்களத நிறுவனம் இந்தப் பயிற்சியினால் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இத்துறையில் பாண்டித்தியம் இல்லாது ஆரம்பிக்கப்பட்ட சாதாரண தையல் பயிற்சி நிலையமாக இயங்கிய எங்களது நிறுவனத்தினை இந்த அரச சிலைட் நிறுவனத்தின் டெக்ஸ்டைல் பொறியியலாளா்கள் தந்த பயிற்சியினால் 500 பேர்களுக்கு தொழில் வழங்கி எங்களது உற்பத்திகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உற்பத்தி செய்வதற்கு பெரிதும் வழிவகுத்தது. எனத் தெரிவித்தாா்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -