இலங்கையை நண்பனாக கருத வேண்டாம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார்.பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே கருணாநிதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை.
தமிழர்களை இலங்கை அரசாங்கம் கௌரவத்துடன் நடத்தவில்லை.
இந்த நிலையில், இலங்கையை இந்தியா நண்பனாக கருத்த கூடாது எனவும் இலங்கை தொடர்பில் கடுமையாக நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
