நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடுத்த கட்ட நகர்வு..!

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடுத்த கட்ட நகர்வுகள், மூல உபாயங்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று கடந்த 03,04.10.2015 ஆகிய இரு தினங்களில் கொழும்பில் இடம்பெற்றது.

ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில், நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் அனுபவங்கள், அவற்றின் சாதக பாதகங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இவ்வமர்வில் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னணியின் எதிர்கால நடவடிக்கைளை செயல் வேகத்துடனும் புதிய வீச்சுடனும் முன்னெடுப்பதற்கான நம்பிக்கையையும் உந்து சக்தியையும் இச்செயலமர்வு ஏற்படுத்தியுள்ளது. விடப்பட்ட தவறுகள் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் இங்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாற்றம் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பான வெளி அவதானங்கள் குறித்தும் இங்கு வளவாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

நல்லாட்சி, ஊழல் எதிர்ப்பு தொடர்பாக கதிர்காமர் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணவர்தனவும், ஜெனீவா விவகாரம் தொடர்பாக ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக் கழக விரிவுரையாளர் சமீர பெரேராவும் இங்கு கருத்துக்களை முன்வைத்தனர். முஸ்லிம் தரப்பு வளவாலர்களும் இதில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் 2020 வரையிலான மூல உபாய நகர்வுகள், தொலைநோக்கு என்பன விரிவாக கலந்துரையாடலுக்கு உப்படுத்தப்பட்டு, பாதை வரைபடம் ஒன்று (Road Map) அடையாளம் காணப்பட்டது.

தேர்தல் கால செயற்பாடுகள், கூட்டணி அரசியலின் சாதக பாதகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. தேர்தல் கால செலவினங்களில் ஏற்பட்டுள்ள துண்டு விழும் தொகையினை ஈடுசெய்தல், நிதி நெருக்கடியை தீர்த்தல் தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கேட்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டது. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உள்ளூர் மற்றும் பிராந்திய மட்ட அரசியல் செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று இறுதித் தீர்மானத்தை எடுப்பது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் எதிர்கால நகர்வுகள் மூல உபாயங்கள் குறித்து தொடர்ச்சியாக அக்கறை செலுத்தப்படும் எனவும், மக்களது அடிப்படைப் பிரச்சினைகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவகாரங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் இதில் ஆராயப்பட்டது.

மொத்தத்தில் ஒரு புதிய வீச்சுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியலை முன்னெடுப்பது எனவும் கட்சியின் பேராளர் மாநாட்டை விரைவில் நடாத்துவது எனவும் இந்த செயலமரின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -