நஜ்முல் ஹுசைன்-
அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கொழும்பு சாஹிரா கல்லூரி 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவில் சம்பியன் கேடயத்தையும் 17 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டது.
19 வயது பிரிவுக்கு அணித் தலைவராக எம்.முஸர்ரப்பும், 17 வயது பிரிவுக்கு அணித்தலைவராக எம்.ஏ.அக்கீல் அஹமத்தும் விளையாடினர். இங்கு படங்களில் வெற்றிக் கேடயங்களோடு அணியினரும், அணித்தலைவர்களான எம்.முஸர்ரப்பும், எம்.ஏ.அக்கீல் அஹமத்தும் தமது பயிற்றுவிப்பாளருடனும் காணப்படுகின்றனர்.


