இன்று ஊடகங்களில் முதலிடம் பிடித்த செய்திகளில் ஒன்று..!

தண்ணீர் யுத்தம்
ன்று ஊடகங்களில் முதலிடம் பிடித்த செய்திகளில் ஒன்று "தேசிய நீர்வழங்கள் சபையூடாக நாடுமுழுவதும் 45%மான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் 2020ல் 60%மாக உயர்த்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் நடவடிக்கை.

இதே வேளை வாகரை பிரதேச எல்லையில் அமைந்துள்ள கேணி நகர் குளத்தில் குளிக்கச்சென்ற சிறுமி ஒருவர் மூழ்கி மரணம், மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் என்ற செய்தி கொட்டை எழுத்திலும் காணவே முடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் நீருக்கான போராட்டம் நடத்தி வாழும் மக்களில் நாவலடி பிரதேச மக்கள் முதன்மை பெருகின்றனர். 

குறிப்பாக கோடை காலம் தொடங்கிவிட்டால் வருடத்தில் பாதிப்பகுதி வறட்சியினாலும் வறுமையினாலும் கழிந்து போகின்ற நிலைமை காணப்படுகின்றது. குடிப்பதற்கான நீர்த்தட்டுப்பாடு ஒருபுறம், வீட்டுத்தோட்டங்கலையாவது செய்து வாழ முடியாத நீர்த்தட்டுப்பாடு ஒருபுறம் என இம்மக்கள் வாட்டியெடுக்கப்படுகின்றனர். 

வாகரைப்ப்பிரதேச சபை, செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோரலை மத்தி பிரதேச செயலகம் என்பன இப்பிரதேச மக்களுக்கான குடிநீர் வழங்கலை மேற்கொள்ள வேண்டிய நிர்வனங்களாகும். ஆனால் முளுப்பிரதேசத்துக்கும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பொது நீர்த்தாங்கிகளில் நீரை நிரப்பிவிட்டு சென்றுவிடும் இவர்களது சேவைகள் முலுப்பிரதேசத்துக்குமான தேவையை நிறைவேற்ற போதுமானதாக காணப்படுகின்றது. 

வாரத்தில் ஒரு முறை அல்லது வாரத்தில் இருமுறை மாத்திரமே குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். அரச மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களின் நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கிணறுகள் பெரும்பாலும் நான்கைந்து மாதங்களுக்கே நீர் வழங்க கூடியதாக அமைந்துள்ளது. மற்றய காலங்களில் மணல் குதிராகவே காணப்படுகின்றது. சுத்தமான நீர் இன்மையினால் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை இப்பிரதேச மக்கள் எதிர்கொள்வதோடு தொழில் ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். 

பெரும்பாலும் யுத்தத்தினால் பாதிப்படைந்த மீள்குடியேற்ற கிராமமாக இவை காணப்படுவதனால் ஜீவனோபாய வழிமுறையாக பெரும்பாலானவர்கள் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்வதோடு சிலர் பெருந்தோட்டங்க்களையும் பயிர் செய்து வருகின்றனர். நீர் அரிதான காலப்பகுதி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி விடுவதனால் அவர்கள் தமது பிள்ளைகளை பாடசாலையை விட்டும் நிறுத்தி விடுகின்ற கவலைக்குரிய நிலைமைகளையும் அவதானிக்க முடிகின்றது. 

எழுமாராக கேணி நகர் தைக்கா வீதியில் கல விஜயம் செய்தபோது பதினைந்து குடும்பமளவு உள்ள அப்பகுதியில் 8குழந்தைகள் பாடசாலை கல்வியை விட்டும் இடைவிலகல் செய்துள்ளதை அவதானிக்க முடிந்தது. சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களது கவனயீனமும் காரணமாக அமைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழ்க்கையின் விழிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட பலர் இப்பிரதேசங்களிலே குடியிருக்கின்றனர். 

நீண்டதூரம் குடினீரை பாத்திரங்களை சுமந்து செல்லும் பென்களின் இயலாமையை அவர்களுடன் உரையாடும் போது பகிர்ந்து கொள்ள முடிந்ததது. ஆலங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர்த்தாங்கியிலிருந்து போதியளவு குடினீரினை இப்பிரதேச மக்களுக்கு வழங்க முடியும் என பிரதேச வாசிகள் கருதுகின்றனர். அவ்வாரே அண்டிய குளத்திலிருந்து அல்லது வாஹனேரி குளத்திலிருந்து சுத்திகரித்த நீரையாவது குடிப்பதற்கு வழங்க அரச நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துக்கொள்கின்றனர். 

மறுபுறம் நீர்வழங்கலுக்கு பொறுப்பான பிரதேச சபைகளை அணுகி வினவுகின்ற போது தமக்கான ஆலனை மற்றும் இயந்திர பற்றாக்குறைகள் குறித்து குறைபாராட்டி நழுவிச்செல்லும் வாய்ப்பினை காணமுடிகின்றது. சில போது பிரதேச சபைகளை பிரதேச செயலகமும், பிரதேச செயலகங்களை சபைகளும் குற்றம் சுமத்திக்கொண்டு தமது பொறுப்பிலிருந்து நழுவிச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. 

நீரைத் தேடிச்சென்று குழியில் விழுவதும், குளிக்கச்சென்று குளத்தில் விழுவதும் என இம்மக்கள், குறிப்பாக சிறுவர்கள் மரண பீதியில் வாழ்ந்து வருகின்றனர். தண்ணீர் இன்றி கண்ணீருடன் வாழும் இம்மக்களுக்கு பாரிய பொதுக்கிணருகளை அல்லது நீர் விநியோக திட்டத்தினை மாவட்ட அரசியல்வாதிகளும் முன்வைக்கவேண்டும்.

மூன்றாவது உலக மகா யுத்தம் இடம்பெருமேயானால் அது நீருக்கான போராட்டமாகவே அமையும் என விற்பனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கான ஆரம்ப அடித்தளம் இப்பிரதேசங்களிலே தொடக்கி விடப்பட்டுள்ளதா என்ற கேள்வி அடிக்கடி இடம்பெறும் இத்தகைய மரணங்களும், நீர் சண்டைகள் மூலமும் காணமுடிகின்றது.
ஜுனைட் நளீமி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -