வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் அரச சேவையில் இணைந்து கொள்ள மிகவும் குறைவான விண்ணப்பங்களே கிடைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சமுத்ரா தேவி பாலிகா கல்லூரியில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நீண்டகாலம் போர் நடைபெற்ற காரணத்தினால், வடக்கு, கிழக்கில் கல்வி நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
ஏனைய மாகாணங்களில் பூகோளவியல், காலநிலை மற்றும் மனித வள பிரச்சினைகள் காரணமாக கல்வித்துறையில் ஓரளவு முரண்பாடுகள் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.