தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ஆம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இரட்டை கொலை சம்பவம் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பான சாட்சியான பெண் அச்சம் காரணமாக இதுவரையில், அதனை வெளியில் சொல்லாத நிலையில், நேற்று முன்தினம் (21) காத்தான்குடி காவல்துறையில் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்தே பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரசாந்தனின் சகோதரனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
