அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
62 வயதான குறித்த நபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு செல்லவில்லையெனவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பொலிஸார், கடற்கரைப்பகுதித் தேடுதல் மற்றும் புதர்த் தேடுதல் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
