ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
அதாவது, இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இலங்கையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொர்பாக விசாரிக்கப்படும் என்று.
இந்நிலையில், இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட்ட பலரை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் மகிந்த ஆதரவு அணியினர் இந்த கலப்பு நீதிமன்றத்திற்கு பலத்த எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
இதில் முக்கியமாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேச ஆரம்பித்தார்.
இதன் போது அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட கலப்பு நீதிமன்றம் தொடர்பாக ஏன் விவாதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
எனினும் இது குறித்ததான விவாதம் பிறிதொரு நாளில் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர். இதற்கு அரசாங்க தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் கோபத்தோடு பேசினார்.
ஆனால் இது தொடர்பாக விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். இருப்பினும் கலப்பு நீதிமன்றத்தை ஐ.நா மனித எரிமைகள் பேரவையின் தீர்மானமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையோ முன்மொழியவில்லை என்று குறிப்பிட்டார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த எதிர்க் கட்சியினர். இல்லை கலப்பு நீதிமன்றம் தொடர்பாகவே முன்மொழியப்பட்டது என வாதாட்டத்தை தொடர, நீதிமன்றம் சூடான கருத்துக்களை வாங்கிக் கொண்டது.
இது இவ்வாறிருக்க, திடீரென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, மகிந்த ராஜபக்சவை நோக்கி அவையிலுள்ள எதிர்க் கட்சியினர் குறிப்பிடுவது போன்று ஐ.நா முன்மொழிந்துள்ளது கலப்பு நீதிமன்றத்தையா என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்திருந்தார்.
இந்நிலையிலேயே சபையில் இரு தரப்பினரின் சத்தத்தை அடக்க முடியாத சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
