நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதேச மட்டக் கலந்துரையாடல்கள் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கலந்துரையாடல் ஒன்று இன்று ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதேச நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் H.உபைதுல்லாஹ் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேலைத்திட்டங்கள் குறிந்தும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடபிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக NFGGயின் வேலைத் திட்டங்களை ஏறாவூரில் எதிர்காலத்தில் முன்கொண்டு செல்வது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்பான வினவப்பட்ட சந்தேகங்களுக்கும் தேகிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் (நளீமி) உள்ளிட்ட பிரதேச செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.



