க.கிஷாந்தன்-
மஸ்கெலியா பெயார்லோன் சாமிமலையைச்சேர்ந்த லெட்சுமணன் காளிமுத்து என்பவரை 21/09/2015 லிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைகென சென்ற இவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி வைத்தியர் பணித்துள்ளார்.
அதன் படி அவரை அன்றைய தினம் அனுமதித்ததன் பின்னர் மறுநாள் பார்க்க வரும் போது அவர் அங்கு இருக்கவில்லை. இது குறித்து வைத்தியசாலையில் விசாரித்த பின்னர் அவரை காணவில்லை என்றே பதில் கிடைத்திருக்கின்றது. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவர் தொடர்பான தகவல்கள் அறிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது அவரது மகன் கோபிரொசானின்0757476162 , 0527913193 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறியத்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.