அரசியலமைப்பு சபைக்கான மூன்று குடியியல் உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சர்வோதய இயக்க தலைவர் ஏ.டி ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் ஆகியோரே பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களை அரசியலமைப்பு சபைக்கு உள்ளீர்க்க எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதில் ஏ.டி ஆரியரத்ன மற்றும் ராதிகா குமாரசுவாமி, 100 நாள் அரசாங்க வேலைத்திட்டத்தின் போதும் அரசியலமைப்பு சபைக்கான குடியியல் உறுப்பினர்களாக பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
ஏற்கனவே பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாக ஜே.வீ.பியின் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
