இலங்கையில் பல பாகங்களிலும் ஒரே நேரத்தில் மின் தடை ஏற்பட்டதன் காரணம் என்ன..

ன்று அதிகாலை நாட்டின் பல பாகங்களிலும் திடீர் என ஏற்பட்ட மின்சார தடை தொடர்பில் காரணத்தை கண்டறியுமாறு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மின்சார சபைக்கு உத்தரவிட்டிள்ளார்

அதேவேளை பிரதான மின்சார கட்டமைப்புக்குள் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் எனவும், இதற்கான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் அநுர விஜேயபால தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு 12 மணியின் பின்னர் திடீர் மின்தடை ஏற்பட்டடை அடுத்து சில மணித்தியாலங்கள் நாட்டின் பல பகுதிகளும் இருளில் மூழ்கியது.

இதனை தொடர்ந்து மாகாண ரீதியாக மின்சார விநியோகம் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் சில பகுதிகளில் மின்தடை காணப்படுவதாகவும் மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -