ஏ.எஸ்.எம்.தானீஸ், MPC மீடியா -
திருகோணமலை மூதூர் தறுல் ஜென்னா வித்தியாலயத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு வருகை தந்த அரசியல் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் மத்தியில் நீண்ட கருத்துப்பரிமாற்றத்துக்குப்பின் உரையொன்றினை நிகழ்த்தினார்.
அவர் அங்கு குறிப்பிடுகையில்:
ஒவ்வொரு ஊர்களும் தங்களது ஊர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்,மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென்ற மக்கள் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கின்ற இத் தருணத்தில் கட்சியின் போராளிகள் உரிமைப் போராட்டம் நடாத்தும் சூழலும் உருவாகியுள்ளது.
கட்சியை பாதுகாத்து எமது மக்களின் அபிலாசைகளை வெண்றெடுப்பதற்கும் கட்சி பிளவு படும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பும் தலைமையிடம் உள்ளது. தலைமை திருகோணமலைக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. கடந்த முறைகூட கட்சியின் செயலாளருக்கும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இங்கிருக்கின்ற தெளபீக் ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு, பிரதி அமைச்சுக்கள் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது குறிப்பிட்ட அரசியல்வாதிகள், பொதுமக்களுடைய கட்டாயப்பொறுப்பாக இருக்கிறது. தொடர்ந்தும் ஒரே இடத்துக்கு அதிகாரங்களப் பறித்துக்கொடுக்க முடியாது. அப்படி செய்யவும் நான் விரும்பவில்லை.
ஆனால் திருகோணமலைத் தொகுதி மக்களின் கிழக்கு மாகாண சபை அதிகார எதிர்பார்ப்பினை நான் அறியாமலில்லை காலம் வருகின்றபோது ஒவ்வொன்றாக நிறைவேற்றவேண்டியது இந்த கட்சியின் தலைத்துவத்தின் பொறுப்பாக இருக்கிறது. அதுபோன்று பாராளுமன்ற அதிகாரமும் முழுமையாக ஒரே இடத்துக்கு வழங்கி ஏனைய ஊர் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் பல கட்டங்களாகப் பிரித்துக் கொடுக்க கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
அந்தவகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது பிரித்துக்கொடுக்கும் நடைமுறையினை நம்பிக்கையுடன், நம்பிக்கையுடையோருடன் ஒப்பந்தம் செய்து ஒப்படைக்கப் படும். எனவே இப்பிரமாண்டமான கட்சியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இங்குள்ள அரசியல் முக்கியஸ்தர்களிடம் உள்ளது. வேலைவாய்ப்புகள் வழங்கும் விடயத்தில் கட்சியும், தலைமையும, கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, பொறுப்புனர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென்றும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளதனால் அதனைச் செய்து கொடுத்தாவது இக்கட்சியினைக் காப்பாற்றும் பணியைச் சரியாக நாம் செய்யவேண்டும்.

தலைமைத்துவம் மூடி மறைத்து செல்கின்றதென நீங்கள் ஆதங்கப்படத்தேவையில்லை. பக்குவமாக இவ்விடயத்தை கையாள வேண்டிய நிலை தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. சரியான விடயத்தை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். சரியான விடயத்தை பிழையான நேரத்தில் சரியென நினைத்து செய்வது பிழையாகி விடும். ஆகவே திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் ஏலவே ஒரு தடவை வழங்கப்பட்டுள்ளது. மூதூரில் தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட வேளை ஒருவர் மாவட்டத்தில் இருக்கத்தக்க கிண்ணியாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் இம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற இவ்வேளையில் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் வழங்காமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே தலைமை இவ்விடையத்தில் சரியாக சிந்தித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வில் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜே.எம்.லாஹீர் முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்,முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உட்பட முன்னால் மக்கள் பிரநிதிகள் கட்சியின் போராளிகள் என பலர் கலந்து கொண்டனர்.