மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு - அமைச்சர் ஹக்கீம்

இக்பால் ஜெம்சாத்-

ஹேவாஹெட்டத் தொகுதியில் தெல்தோட்டை, கலஹா, உடுதெனியப் பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர், பாதை சீர்கேடு, வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்விப் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் உறதியளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி செலுத்துவதற்கான மூன்றாம் கட்ட விஜயமொன்றை சனிக்கிழமை (05) ஹேவாஹெட்டத் தொகுதியில் கலஹா, தெல்தோட்டை, உடுதெனிய (மாரஸ்ஸன) பிரதேசங்களுக்கு மேற்கொண்ட போதே இவ்வாறு கூறினார்.

முதலில் கலஹாவுக்கு சென்ற அமைச்சர் ஹக்கீம், தெல்தோட்டை, கபடாகம, ரல்லிமங்கொட, கோணாங்கொட, பத்தாம்பள்ளி, முஸ்லிம் கொலனி, முப்பதுவீடு,மெதகெக்கில,பீலிக்கரை, வனஹப்புவ, வெட்டகேபொத்த, பல்லேகம, உடுதெனிய ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்தபோது மக்கள் திரண்டு நின்று மகத்தான வரவேற்பளித்தனர். சிங்கள, தமிழ் மக்களும் அமைச்சரை வரவேற்றதோடு தமது பிரச்சினைகள் குறித்து அவருடன் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தம்மை வரவேற்று உபசரித்த ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விஜயம் நள்ளிரவு வரை நீடித்தது.

அமைச்சர் ஹக்கீமின் விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ்,ஹேவாஹெட்டத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மௌலவி எச்.எம்.இல்யாஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -