அபுஅலா ,ஹாசிப் யாஸீன்-
அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின்கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் ஆரம்ப கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சனிக்கிழமை (26) விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், விளையாட்டுத்துறை அமைச்சின்பொறியலாளர் ரணசிங்க பெரோரா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, முன்னாள் உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ் உள்ளிட்ட பலர்அடங்கியிருந்தனர்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்டக் கூட்டமும், கலந்துரையாடல்களும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பின்னர் குறிப்பிட்ட மைதானங்களை இக்குழுவினர் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கை நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு, அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற பிரதேங்களும் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.







