இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதன்முறையாக மும்மொழிகளிலான புனித பைபிள் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
கிளரீரியன் துறவற சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி நீர்கொழும்பு கிளரீசியன் குருமடத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சகல இனங்களிடையேயும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னுதாரப்பணிகளில் ஒன்றாக புனிதநூலை மும்மொழியில் வெளியிட இருப்பதாக கிளரீசியன் நூல்நிலையத்தின் உதவி பணிப்பாளர் அருட்தந்தை ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது சுமார் 75000 பரிசுத்த நூல்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் அந்தந்த மறை மாவட்டங்களின் ஊடாகவும் கிளரீசியன் நூல் நிலையத்தின் ஊடாகவும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில்இ ஆயர்கள் மற்றும் குருக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

