இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஹைபிரைட் நீதிமன்றத்தை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நீதிமன்றத்துக்கு தாம் எவ்விதத்திலும் உதவ தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த நீதிமன்றம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், குறித்த நீதிமன்றத்துக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை. உள்நாட்டிலேயே திறமையான நீதிபதிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், உள்நாட்டு நீதிபதிகள் அங்கம் பெறும் நீதிமன்றம் (டொமஸ்டிக்) ஒன்றுக்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
