இலங்கை முஸ்லிம்களின் அரசியல் புரட்சி,மாமனிதர் அஷ்ரப்பின் 15வது ஞாபகார்த்தம் துஆப் பிரார்த்தனைகள் இறைஞ்சுதல்களோடுஅவரின் ஆத்மாசாந்திக்கா கசமுதாயம் வழிபாடுகளில் ஈடுபட ஆயத்தமாகவிருக்கும் இப்புனித வேளையில் மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் கசிந்திருக்கின்றது.......
மாமனிதரின் மறைவே இச்சமுதாயத்திற்கு இன்னும் மறக்கமுடியாதபேரதிர்வைத் தந்தது.அறநாயக்காவில் நிகழ்ந்தஅந்தகொடூரஅனர்த்தம் மீண்டும் எம்மைஅரசியலில் அநாதைகளாக்கிவிடுமோ?.......என்று இந்நாட்டு முஸ்லிம்கள் அங்கலாய்த்துபரிதவித்தவேளையில்தான் வல்லஇறைவன் '
ரஊப் ஹக்கீம்' என்ற மனிதாபிமானத்தின் மகுடமான சாணக்கியத் தலைவனை அன்று எமக்கு வெளிப்படுத்தினான்.' அல்ஹம்துலில்லாஹ்' அத்தலைமையும் இன்று 15வருட தலைமைத்துவத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்துகின்றது.
தலைமைத்துவம் கதிரையில் அமருமுன்பே ஏகப்பட்ட சவால்கள். பக்கவாத்தியங்களோடு கூடிய இரட்டைத் தலைமைப் போட்டி. ஹக்கீமின் தலைமையைத் தட்டிப்பறிக்க அரச அதிகாரங்களோடு அத்தனையுமே நடந்தன. ஆனால் எமது சமகாலத் தலைவன் சளைக்கவில்லை. அது முடியாமல் போக கட்சியினுள் வெடிப்பையும் பிளவையும் ஏற்படுத்தி தலைமையை நலிவுபடுத்த, இக்கட்சியை அழிக்க எத்தனையோ சதிவலைகள் பின்னப்பட்டன.
அத்தனையும் தோல்வியுறபதவி, கதிரைக்கான போட்டிகள் பிறகட்சித் தாவல்கள் மூலம் தொடர்ச்சியாகசதிகள் அரங்கேற்றப்பட்டன. இக்கைங்கரியத்தை மாமனிதரின் காலத்திலேயே ஆரம்பித்து மகுடத்துடன் சாதனைபடைத்த சேகுஇஸ்ஸடீனின் வரிசையில் ஹிஸ்புல்லா, அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், பேரியல்,றிசாத் பதியுதீன், அமீர் அலி, நஜீப் மஜீட், பாயிஸ், பைலா, நிஜாமுடீன் என்று சமுதாயத் துரோகத்தனத்தின் பட்டியல் நீண்டுசெல்கின்றது.
இப்பட்டியலில் செயலாளர் நாயகமும் இப்பொழுது இணையவிருக்கின்றார்?....... அல்லது அவரை இரையாக்குவதற்கு திரைமறைவில் பகீரதப்பிரயத்தனங்கள் நடைபெறுகின்றன என்றஅதிர்ச்சித்தகவல் உணர்வுள்ளகட்சித் தொண்டர்கள், போராளிகளின் மத்தியிலே மனக்கிலேசங்களையும் பலகேள்விகளையும் கிளறி விட்டிருக்கின்றன. மருதமுனையில் ஞாயிரன்று நடந்து முடிந்த அம்பாரை மாவட்டக்குழுக் கூட்டத்தில் நாம் உள்ளும் புறமும் கண்டங்களை தாண்டவேண்டியிருக்கின்றது என்று கூறி நெஞ்சங்களை நெகிழவைத்த தலைமையின் பேருரை.
செயலாளர் நாயகத்தின் திரைமறை நாடகத்தை உறுதி செய்வதாய் அமைந்திருந்தது.
என்னநடந்தது?...........
அம்பாரைமாவட்டத் தேர்தலின் முழுப்பொறுப்பினையும்வளங்களோடுசெயலாளருக்குவழங்கி மூவரைமட்டும்நிறுத்தி,வெற்றிவியூகத்தைவகுத்தளித்தசாணக்கியத்தலைமைதேர்தல் முடிந்தகையோடுசெயலாளரின் பேச்சிலும் போக்கிலும் ஏற்பட்டதிடீர் திருப்பத்தினைஉணரத் தவறவில்லை. தேசியப் பட்டியலில் கௌரவத்திற்காகசெயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் 2நியமன MP பதவிகளும் தலைவருக்குநெருங்கியநம்பிக்கைக்குபாத்திரமான இருவருக்குதற்காலிகமாகவழங்கப்பட்டதன் பிரதிபலிப்பே இதுவாகும்.தேர்தலைத்தொடர்ந்துநடைபெற்றமுக்கியஉரையாடல்கள்,உயர்கூட்டங்னள்,கட்சிசந்திப்புகளைமுன்னின்றுஒழுங்குபடுத்தவேண்டியசெயலாளர் நாயகம் அவற்றில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார்;. தலைமைத்துவத்தின் அழுத்தமேஓரிரு கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கானகாரணம் என்பதுஎமக்குபுரியாததல்ல.தொடர்ந்;து செயலாளரினால் தலைமையைகுறிவைத்துவிடுக்கப்பட்டஅபத்தமானசொற்கணைகள்,தனிப்பட்டவிமர்சனங்கள்என்பவைதேசியப்பட்டியல் தொடர்பானஅவரின் காழ்ப்புணர்ச்சியையும,; அடம்பிடித்தலையும் காட்டிநிற்கின்றன.ஆனால் இந்தச் செயற்பாடுகள் உங்களதுபண்படாதசிறுமைத்தனத்தையும்,அசல் சுயரூபத்தையும் சமுதாயத்திற்குவெளிக்காட்டவில்லையா? என்றஉண்மையைகடந்த 15வருடகால சமகாலத் தலைமைத்துவஅரசியலோடுசற்றுஒப்பிட்டுப் பாருங்கள்.மறைந்ததலைவரின் 'கோவைநிர்வாகியாக'செயற்பட்டஉங்களுக்குசெயலாளர் நாயகம் என்றகட்சியின் 2வது தலைமைப்பதவியைவழங்கி,மக்களால் தெரியப்பட்டபிரதிநிதிக்குமேலதிகமாகஏனைய உரிமைத்தாகமுள்ளஊர்களையும் புறக்கணித்து இரண்டுமுறைதேசியப்பட்டியல் நியமனத்தைவழங்கிகௌரவித்ததலைமையைவாய்கூசாமல் நன்றிகெட்டமுறையில் தூற்றிவருவதுபக்குவமில்லாமல் உங்களுக்குவயதுமட்டும்தான் போயிருக்கின்றதுஎன்றஉங்களின் பரிதாபநிலையைபறைசாற்றவில்லையா?.....நியமனஎம்பியாக இருமுறைஅனுபவித்துஓய்வூதியத்துடன் தகுதிபெற்று,அறிக்கைவிடுவதில்மன்னனாகமட்டும் இருந்ததைவிட இச்சமுதாயத்திற்காகநீங்கள் சாதித்தவைஎன்ன? என்றபெருவினாவும் உங்கள் வயதோடுவிஸ்வரூபமெடுத்துநிற்கின்றது.ஆசைபேராசையாகமாறிஉங்களதுகண்களை மூடியிருப்பதை இன்னும்தான் உணரவில்லையா?.....உங்களதுகுறைகுடசெயற்பாடுதலைமைத்துவத்திற்குதேவையில்லாததலைஇடியையும் இடியப்பச் சிக்கலையும் ஊர்,சமுதாயக் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதுஎன்றயதார்த்தம் இன்னும்தான்உங்கள்அறிவுக்குபுலப்படவில்லையா?........
அட்டாளையின் பரிதாபநிலை:
30வருட கட்சிப்போராட்டத்தில் முனைப்பாகநின்றுபலதியாகங்களுடன் சி.ல.மு.அரசியலில் சாதனைபடைத்தமண்தான் அட்டாளைச்சேனைப் பிரதேசம்.1990ல் இப்போராட்டத்தில் உயிர்த்தியாகங்கள் செய்த 14சஹீதுகளை
அடக்கம் செய்துவிட்டு இன்னும் பொறுமைகாத்திருக்கும் மண்அது.அதாவுல்லா,உதுமானின் அராஜக அடக்குமுறைஅரசியலில் சொல்லொணாத் துன்பங்களோடுபொலிஸ்,கோடுஎன்றுசெய்யாதகுற்றங்களுக்காகதண்டனைகளைஅனுபவித்துவரும் மண்தான்அட்டாளைச்சேனைப் பிரதேசம். தொடர்ந்தேர்ச்சியானதியாகங்களோடுநடந்துமுடிந்ததேர்தலில் தலைமையின் ஆணையைசிரமேற்கொண்டு மூவருக்கும் வாக்களித்ததன் மூலம்வென்றெடுத்துவரலாற்றுச் சாதனைபடைத்து மூன்றுதொகுதிகளையும் சமப்படுத்தியபெருமைஅட்டாளைச்சேனையையேசாரும். இவ்வாறுவாழைமரமாகதம்மையேஅழித்துக்கொண்டுபோராடிநின்றமண்ணுக்குபொத்துவில் தொடக்கம் புல்மோட்டைவரையுமுள்ளபெரியஊர்களுக்குவழங்கப்பட்டபாராளுமன்றஅரசியல் அதிகாரம் இப்பிரதேசத்திற்கு இன்னும் வழங்கப்படாமலிருப்பதுதுரதிஷ்டமானது. சம்மாந்துறை,கல்முனை,நிந்தவூர்என்றமுக்கூட்டுஅடுப்பில்தொடர்ந்தும் எரிகின்றவிறகுக்கட்டைகளாகஅட்டாளைச்சேனைப் பிரதேசத்தைசெயலாளர்நாயகமோமற்றவர்களோநினைத்தால் அதுஅவர்களின் அறியாமையைக் காட்டும்.மாவட்டத் தேர்தலைதலைமைதாங்கிநடாத்தியசெயலாளர் நாயகம்பரந்துபட்டஅட்டாளைச்சேனைபிரதேசத்தில் மட்டும் ஒருதேர்தல் மேடையில்கூடகலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டவஞ்சகமானகைங்கரியம் இப்பிரதேசத்தின் பால் அவர்கொண்டிருக்கும் பொறாமையையுமஅவரின் பிரதேசவாதவஞ்சகத்தையும்; காட்டிநிற்கின்றது.
தேசியத் தலைவரினால் இம்முறைஎல்லாமேடைகளிலும்உறுதியாகவாக்களிக்கப்பட்டஅட்டாளைச்சேனைக்கானஎம்பிநியமனம்படித்த,தகுதியான,ஒழுக்கமுள்ளகட்சிக்காகதியாகங்கள்புரிந்தநம்பிக்கையுடையசிரேஷ்டமானவருக்குமுன்னுரிமையில்தாமதிக்காமல்வழங்கப்படல் வேண்டும்.அதைவழங்கிதனதுசொல் வாக்கினை,அமானிதத்தைபாதுகாத்துதனதுதலைமைத்துவத் தகைமையைப் பேணதலைமைத்துவம் தயாராகவேஉள்ளது.ஆகவேசெயலாளர் நாயகம்தாமாகவேமுன்வந்து இதற்குவழிவிட்டு,பண்புடன் தனதுமரியாதையையும் தான்வகிக்கும் கட்சிப்பதவியின் கௌரவத்தையும்பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.தலைமைத்துவத்தின் இக்கட்டான சூழலைநன்குபுரிந்துகொண்டுவிளக்கத்துடன்,விட்டுக்கொடுப்புடன் முன்னுதாரணமாகசெயற்படவேண்டும்.பதவிபட்டம்,கதிரைக்காகவேநான் இயங்குகின்றேன்,ஆனால்சமுதாயத்திற்காகஅல்லஎன்றதனதுஅசிங்கமானநிலைப்பாட்டைஅவர்உடன் மாற்றிக்கொள்ளவேண்டும். ஒருசாதாரணபோராளிக்குரியபக்குவமும் சமுதாயஉணர்வுமற்றஒரவராகதன்னைத் தாழ்த்திக் கொள்வதையிட்டுஅவர்வெட்கப்படவேண்டும்.ஜே.வி.பியும் ஏனைய அநேகமானகட்சிகளின் செயலாளர்களும்எம்பிப்பதவியில்லாமல் பாராளுமன்றத்திற்குவெளியே இருந்துபொதுநோக்கில் செயற்படும் கைங்கரியத்தைஅவர் எண்ணிப்பார்க்கவேண்டும். ரஊப் ஹக்கீம் எனும் மனிதாபிமானமகுடத்தின்பொறுமையையும் நிதானமானதலைமைத்துவஆளுமையையும்மேலும் சீண்டுவதற்குசெயலாளர் முனையக்கூடாது. புக்குவத்துடன் இவற்றைசெய்யமுடியாவிடில் கட்சியையும் ஊர்களையும் சமுதாயத்தையும் குழப்பாமல் செயலாளர் பதவியைஇராஜினாமாச் செய்துவெளியேறுவதுஉசிதமானதுஎன்றுஆலோசனை கூறுகின்றோம்.
ஆயுட்காலத் தலைமை:
பல்லின,பலமொழிமக்கள் வாழும்சகவாழ்வுடன் கூடியஆனால் அச்சுறுத்தல் நிறைந்த இலங்கைபோன்றஒருநாட்டிற்குரஊப் ஹக்கீமின் அமைதியான,நிதானமான,பக்குவமான,மனிதாபிமானமகுடத்துடன் கூடியஆளுமையேபொருத்தமானதுஎன்றகருத்து இன்று இந்நாட்டு முஸ்லிம்களிடையேமட்டுமல்லாதுஏனைய சமூகத்தவரிடையேயும் வலுத்துவருகின்றது.வடகிழக்கில் தமிழ் மக்களுடனும் தமிழ் கட்சிகள் இயக்கங்களுடனானஅவரின்பக்குவமானகாய்நகர்த்தல்கள்,புரிந்துணர்வுகள் இன்றுகிழக்கிலேதமிழ் கூட்டணியினரோடு கூட்டுச்சேர்ந்துஒருநல்லாட்சியினையும் அதன்மூலம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரையும் வென்றெடுக்குமளவிற்குமேலோங்கியிருக்கின்றது.அதேபோன்றுவடகிழக்கிற்குவெளியேசிங்களமக்களோடுகலந்துவாழம் முஸ்லிம்களைஒன்றுதிரட்டிஅவர்களின் வாக்குகளின் மூலம் புத்தளம்.குருநாகல்,அநுராதபுரம்,கொழும்பு,களுத்துறைபோன்றமாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரநிதிகளைப் பெறுமளவிற்குவளர்ச்சிஅடையச் செய்;திருக்கின்றஅவரின் செயற்பாடுபோற்றற்குரியது.கண்டியில் தலைமைத்துவம் பெற்ற இலட்சத்திற்கும் மேற்பட்டவாக்குகள் அவரின் புகழைஎடுத்தியம்புகின்றது.
இந்த அமானிதத்தை விலைபோக விடாது, அழியாதுகடந்த 15வருடங்களாக பாதுகாத்துவரும் கைங்கரியம் ஒன்றே அவர் ஆயுட்காலத் தேசியத் தலைவராகவிருந்து இவ்வமானித இயக்கத்தை வழிநடாத்தப் போதுமானது. அவரின் தலைமைத்துவத்திற்கும் பக்குவமான ஆளுமைக்கும் ஆதரவாக உறுதுணையாக இருக்கவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாயகடமையாகும்.
