ஸ்ரீ.மு.கா வினால் கல்குடா வாழ் முஸ்லிம்களின் கனவு நணவாக்கப்படுமா..?

பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலமாகியும் ஐக்கிய தேசிய கட்சியினால்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியலானது கட்சியின் நம்பிக்கைக்குறியவர்களிடமிருந்து இது வரை உரிய இடத்துக்கு கொண்டு செல்லாப் படாமை தொடர்பாக இன்று வரை நாடளாவிய ரீதியில் அளசப் பட்டு கொண்டிருக்கின்ற ஒரு விடயமாகும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என்று குறிப்பிடப்படும் கல் குடா தொகுதியானது கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பாசரையில் வளர்ந்த பல மூத்த போராளிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது ஆனால் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்பும் கூட கல்குடா தொகுதியின் கட்சியின் வளர்ச்சி ஆனாது கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் காலத்தை விட மெச்சத்தக்கதாக காணப்பட்டது என்பதை நாம் அறிவோம்

குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பிற்பாடு 2001ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸின் மூலம் களமிரங்கிய காலஞ்சென்ற மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் களமிறக்கப்பட்டு பாரிய அளவில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது ஆனால் கட்சியி்ன் வளர்ச்சிக்கு அரும் பாடு பட்ட மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் சுகயீனம் காரணமாக நீண்ட காலமாக தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனதை நாம் அறிவோம் பின்பு சிறிது காலத்தில் மரணமும் அவரை தழுவிக் கொள்கிறது இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீ ஊன் 

அதன் பிற்பாடு 2005ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு நடந்த பொதுத் தேர்தலில் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களினால் சிபாரிசு கொடுக்கப்பட்ட தற்போது பிரதி அமைச்சாரக இருக்க கூடிய அமீர் அலி அவர்கள் களமிறக்கப்பட்டு அவரும் காங்கிரஸின் மூலம் வெற்றியை தளுவிக் கொண்டார் என்பதை நாம் அறிவோம் ஆனால் கட்சியின் தலைவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு முறுகளினால் எநஅவர் கட்சியை விட்டு விலகிச் சென்று ஆளும் கட்சியுடன் சேர்ந்து கொண்டார் என்பதை நாம் அறிவோம்

இவ்வாறான ஒரு காலப் போக்கில் கட்சியின் வீழ்ச்சியானது படிப்படியாக மேலோங்கத் தொடங்கியது ஏனெனில் காங்கிரஸின் மூலம் அமீர் அலி அவர்கள் பாராளு மன்றம் சென்றாலும் அவர் ஆளும் கட்சியிலிருந்து மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் போட்ட திட்டங்களையும் அமுல் படுத்தினார் அது மட்டுமன்றி ஊரின் வளர்ச்சிக்கு அவருடைய காலப் பகுதியில் ஏதோ ஒரு வகையான சேவைகளையும் செய்து மக்களை அவரின் பக்கம் திசை திருப்பிக் கொண்டார் ஆனால் காங்கிரசானது தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள தனது வளர்ச்சியையும் மேம் படுத்த சிறந்ததொரு தலைமைத்துவம் தெறிவு செய்யப் படாமையே தனது ஜந்து வருட காலத்தில் தன்னால் முடிந்த சேவைகளை அமீர் அலி அவர்கள் செய்து தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது

பின்பு 2010ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸின் சார் பாக அமீர் அலியின் முன்னால் முன்னனி செயற் பாட்டாளராக செயற்பட்ட லெப்பை ஹாஜீ அவர்களும் அன்றை காலத்தில் வங்கி முகாமைத்துவளராக செயற்பட்ட ஹூசைன் அவர்களும் களமிறக்கப்பட்டார்கள் ஆனால் ஆளும் கட்சியிலிருந்து அமீர் அலி அவர்களும் களமிறக்கப்பட்டார் ஆகையால் இரண்டு சாராருக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்காத தருணத்தினால் தலைவரின் வாய்ச் சொல்லின் நாணயத்தை நம்பி கல் குடா வாழ் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தனது வாக்குகளை அயலுருக்கு தாரை வார்த்து அங்கிருந்து ஒரு பாராளு மன்ற உருப்பினரை தேர்வு செய்தார்கள் ஆனால் அயலுரிலிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவத்தினால் கல் குடா வாழ் முஸ்லிம்களுக்கு எந்த வீத பயனும் கிடைக்க வில்லை தலைவரின் வாய்ச் சொல்லும் காப்பாற்ற படவுமில்லை கடைசியில் ஊரின் பிரதிநிதித்துவமும் கை நளுவிச்சென்றது மாத்திரமும் ஏமாற்றமுமே கல்குடா வாழ் முஸ்லிம்களுக்கு கிடைத்தது.

பின்னர் சுமார் ஆறு வருட காலமாக பாராளு மன்ற உறுப்பினர் இல்லாமல் அல்லோலப்பட்ட கல் குடா வாழ் முஸ்லிம்கள் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எவ்வாறு சரி தனது ஊரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள இரு கட்சியினரும் அயராது உழைத்தார்கள் ஆனால் கல்குடாவில் இம்முறை காங்கிரஸினால் களிமிறக்கப்பட்ட புது முக வேற்பாளர் றியாழ் அவர்கள் மக்களுக்கு அறிமுகம் இல்லாததன் காரணமாக அங்கும் சில பிரிவுகள் ஏற்பட்டதால் கட்சியின் வாங்கு வங்கி இம்முறையும் வீழ்ச்சியை தழுவி அயலுருக்கே எமது பிரதிநிதித்துவம் தாரை வார்க்கப்பட்டது ஆனால் எதிரணியில் களமிறக்கப்பட்ட அமீ்ர் அலி அவர்களின் வாங்கு வங்கி குறைந்த நிலையில் காணப்பட்டாலும் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் களமிறங்கியதால் அயலூர் அந்திய மதத்தவர்களின் வாக்குகளின் மூலம் அவருக்கு தன்னுடைய வெற்றியை தனதாக்கிக் கொள்ள சாதகமாக முடிந்தது

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் எதிர் வரும் காலங்களிலாவது நடக்கவிருக்கும் மாகாண சபை உள்ளூர் ஆட்சி சபை தேர்தல்களிலாவது கட்சியின் வாக்கு வங்கியை திசை திருப்பாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அது கல் குடா வாழ் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கனவு நணவாக்கப்பட்டு றியாழ் அவர்கள் தேசியப் பட்டில் மூலம் பாராளு மன்றம் சென்றால் மாத்திரமே முடியும் என்ற நிர்க்கத்தியான நிலையில் கட்சி தள்ளப் பட்டுள்ள நிலையை எம்மால் அறிய முடிகிறது

இன்னும் ஓரிரு தினங்களில் கொடுக்கப்பட விருக்கும் தேசியபட்டியலை கட்சியின் தலைவர் கடந்த முறை கொடுத்த வாக்குறிமையையும் கட்சியின் வளர்ச்சிக்காக பல் வேறு வகைகளில் தன்னை அர்ப்பணித்த போராளிகள் உள்ள எம் கல்குடா பிரதேசத்துக்கு வழங்கி கட்சியை மேம் மேலும் வளர்ச்சி அடயச்செய்வாரா...?
அல்லது மெம்மேலும் கட்சியை கல் குடாவில் வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்வாரா...?

பொருத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
வை.எம்.பைரூஸ் 
வாழைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -