பத்மராஸ் கதிர்-
கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பகுதியில் கொக்கட்டி மரங்கள் நிறைந்த சோலைகளிடையே சுயம்பு லிங்கப் பெருமான் வீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் வருடாந்த தேரோட்ட நிகழ்வானது (27.09.2015) பல்லாயிரக் கணக்கான பக்த அடியார்கள் வடம்பிடித்து இழுக்க சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள தேரின் சிறப்பு பற்றி நோக்கினால்,
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் தேர்த்திருவிழா மிக விசேடமானது.
இங்குள்ள பழைய இரண்டு ரதங்களும் மிகப் புராதனச் சின்னங்களாகக் காணப்படுகின்றன. இத்தேரிலுள்ள சிற்ப அமைப்புமுறைகளைக் கருத்தில் கொள்ளும்போதுஇ இத்தேர்கள் மிகத் தொன்மையானவையாகக் கருதப்படுகின்றன. மட்டக்களப்பின் அதிபனாயிருந்த தருமசிங்கன் (கி.பி. 958) என்பவனி சோழநாட்டுச் சிற்பிகளை வரவழைத்துக் கோயிலுக்குரிய மூன்று தேர்களை உருவாக்கினான் என்பது ஐதீகம்.
இத்தேர்கள் அமைப்பிலுமி கலைவண்ணத்திலும் மலையாளதேச சிற்பமுறையைக் குறிப்பதாகக் காணப்படுகின்றது. தருமசிங்கனுடைய ஆட்சிக்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுகள் முற்பட்ட தொன்மையுடையதாக இக்கோவிலின் வரலாறு காணப்படுகின்றது.
மட்டக்களப்பு அதிபனாக விளங்கிய தருமசிங்கனால் செய்விக்கப்பட்ட மூன்று தேர்களில் இரண்டு தேர்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. இவை சித்திரத்தேர் என்றும் பிள்ளையார் தேர் என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தேரோட்டத்தை அயலூரிலுள்ள மக்களும் திரண்டு வந்து கண்டு களிப்பர். சித்திரத்தேரின் அடித்தளத்திலே சிவபெருமானின் திருவிளையாடல்களைக் குறிக்கும் அழகுமிக்க சிற்பங்கள் பல செதுக்கப்பட்டள்ளன. இத்தேர் ஐந்து சில்லுங்களைக் கொண்டதோடு ஆறடிவிட்டங் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
இச்சில்லுகளுள் ஒன்று தேரின் அடித்தளத்தின் நடுவிலுள்ளது. சித்திரத்தேரானது பதினாறடி நீளமுமி அதேயளவு அகலமுங் கொண்டது. சுவாமி எழுந்தருளும் மேற்தட்டு இருபத்தியொரு அடி உயரத்தில் அமைந்துள்ளது. அதன் மேல் சித்திரவேலைப்பாடுகள் அமைந்த ஐந்து தளங்கள் காணப்படுகின்றன.
இத்தேரில் உமாமகேஸ்வரர்கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளுவார் பிள்ளையார் தேர் சித்திரத்தேரைவிடச் சிறியது. இத்தேர் பன்னிரண்டு அடி நீளமுமி அதே அளவு அகலமுங் கொண்டது. இதன் மேற்தட்டு பதினாறடி உயரத்திலி அமைந்துள்ளது. அதன் மேல் மூன்று விதானங்கள் உள்ளன. இத்தேரில் பிள்ளையாரும் முருகனும் எழுந்தருளுவர். இத்தகைய சிறப்பு பெற்றதாக இத்தேரோட்ட நிகழ்வு அமைந்துள்ளது.



