அர்ப்பணிப்பான சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் - றஹுமத் மன்சூர் வாழ்த்துச்செய்தி


வாழ்த்துச்செய்தியில் மு.கா. உச்சபிட உறுப்பினர் ரஹுமத் மன்சூர்

நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கிமிற்கு இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மு.காவின் உச்சபீட உறுப்பினர் ரஹ{மத் மன்சூர் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அர்ப்பணிப்பான சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அந்தஸ்துப் பெற்றுள்ள மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை வாழ்த்தும் செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுத்து ஏனைய இனங்களைப் போன்று சமத்துவம் மிக்க இனமாக சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்தியுடன் கூடியதாக கட்டுறுதியான அமைப்பாக மு.கா அமைய வேண்;டும் என பெருந்தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரப் தீர்க்க தரிசனமாக சிந்தித்தார். அது மட்டுமன்றி அந்த இலக்கை நோக்கி முஸ்லிம் காங்கிரஸை முன்னிலைப்படுத்திச் செல்லும் பயணத்திலும் கணிசமான வெற்றியைக் கண்டார்.


காலம் செய்த கோலத்தால் வான்வெளியில் அகாலமரணத்தை பெருந்தலைவர் தழுவிக்கொள்ள அவருடைய தீர்க்க தரிசனமான சிந்தனையும், செயற்தினையும் அவரது பாசறையில் கற்றுக்கொண்ட தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் தலைவரானார். பெருந்தலைவரின் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவையை பின்தொடர்ந்தவர் தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதல் முதல் தர்க்கா நகர் உயிரெடுப்பு வரையில் முஸ்லிம்களின் தோழோடுதோள் நின்றார்.


அது மட்டுமன்றி உள்நாட்டில் இனவாதிகளின் கொடூர பிடியில் முஸ்லிம் இனம் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை அகிலம் பூராகவும் தயக்கமின்றி தற்துணிச்சலுடன் எடுத்துரைத்ததோடு சிறுபான்மை மக்களின் ஆகக்குறைந்த அதிகாரமான 13ஆவது திருத்தச் சட்டத்தினை நாடாளாவிய ரீதியில் சிதறிவாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக அழுத்தமளித்து வந்தார்.


அத்தோடு நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு நல்லாட்சி குழிதோண்டிப்புதைக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் கை ஓங்கி காணப்பட்ட தருணத்தில் நல்லாட்சியை உறுதிப்படு;த்தி ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான தயக்கமின்றி முன்வந்திருந்தார். அதனை சாதித்தும் காட்டினார்.


அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனது நேர்த்தியான செயற்பாடுகளை முன்னெடுத்தவர் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அமையப்பெற்றுள்ள புதிய அமைச்சரவையில்
நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இப்பதவியை ஏற்றுமைக்கு இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களின் சார்பாக இதய பூர்வமான வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்வதுடன் இன, மத, பேதமின்றி தங்கள் சேவை தொடரவேண்டுமென கோருவதோடு மேலும் முஸ்லிம்கள் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுத்து சமத்துவம் மிக்க இனமாக தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அர்ப்பணிப்புமிக்க சேவை தொடரவேண்டும் என்பதில் ஆணித்தனிமான நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -