சம்சுல் ஹுதா-
பொத்துவில் அறுகம்பை களப்பில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மு.ப.3.00
மணியளவில் குறித்த களப்பில் மிதந்து காணப்பட்டதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொத்துவில் நீதவான் நீதிமன்ற
நீதிபதி ஐ.பயாஸ் றசாக் முன்னிலையில் பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டது. குறித்த சடலம் கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த
சுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


