ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இன்று 07.09.205 முற்பகல் பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்ட ஹுனைஸ் பாறூக், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் முக்கிய அதிதிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


