கரீம் ஏ.மிஸ்காத்-
பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தின் மூலம் சரியான தண்டனை கிடைப்பதில்லை எனவும், இவ்வாறானவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும், இவ்வாறான குற்றங்களுக்கு மரணதண்டனைச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எனக் கூரியுமே
இன்று, புத்தளம் நகரில், அரச சார்பற்ற பெண்கள் அமைப்பால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பாலாவியில் அமைந்துள்ள, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அமைப்பும், சமூக அபிவிருத்தி நிதியம் ஆகிய அமைப்புக்கள் ஒன்றினைந்து, இவ்விழிப்புனர்வு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இவ்விழிப்புனர்வு ஆர்ப்பாட்டத்தில் மூவின பெண்களும் கலந்து கொண்டனர்.
