ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கைக்கு பதிலளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை நாளை சமர்ப்பிக்க உள்ளது.
இந்த அறிக்கையை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அனுப்பி வைத்துள்ளது. நாளை வரையில் கால அவகாசம் இருப்பதாகவும் உத்தியோகபூர்வமாக இந்த அறிக்கைக்கு பதிலளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கைக்கு பதிலளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னின் பேச்சாளர் ரவினா சஹாம்தாசனி தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்த அறிக்கை நாளைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பின்னர் அது இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் ஆணையாளர் அல் ஹசெய்ன் விசேட ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்த உள்ளார்.
