ஹுதாஉமர்-
கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு தெரிவு செய்யப் பட்டுள்ள.அதிபர்களில் ஒருவராக மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தெரிவு செய்யப் பட்ட செய்தி மிகவும் சந்தோசமான ஒன்றாக அமைந்துள்ளதாக மாளிகைக்காடு கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் அமைப்பின் தலைவராக செயற்பட்டவரும் அல்- மீசான் பௌண்டசன் தலைவருமான அல்-ஹாஜ் ஹுதா உமர்(J.P) தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,
இந்த பாடசாலை 1993 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தனது கல்விச் சேவையை இந்த பிரதேச மாணவர்களுக்கு வழங்கிவந்த எமது பாடசாலையின் முதல் ஆசானாக வந்து அதிபராக பதவியுயர்வு பெற்று இந்த பாடாசாலையை நல்ல நிலைக்கு கொண்டுவர இரவு,பகல்,காலநிலைகள் எதுவும் பாராது தன்னை முழுமையாக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் அதிபருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த உயரிய கௌரவத்தை எண்ணி இப்பாடசாலையின் சகல விழுதுகளும் பேரானந்தம் கொள்கிறோம்.
நல்லதொரு கலாசாலையாக இந்த பாடசாலை முன்னேறி வரக்காரணமாக இருந்தவர்களின் பட்டியலில் முதன்மை வகிக்கும் எங்கள் அதிபர் அல்- ஹாஜ் ALMA நளீர் அவர்களின் விடாமுயற்சிக்கு கிடைத்திருக்கும் இந்த கௌரவத்தை எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள்,தற்போது கல்விகற்கும் மாணவர்கள்,பிரதியதிபர்கள், ஆசிரிய, ஆசிரிகைகள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் சகலர் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என தனது வாழ்த்துச் செய்தியில் தேசமான்ய அல்-ஹாஜ் ஹுதா உமர் குறிப்பிட்டிருந்தார் .
