அஸ்ஹர்-
கல்/அக்/அல்.முனீறா பெண்கள் உயர்தரப்பாடசாலையின் புதிய முதல்வராக எம்.எச்.எம்.றஸ்மி அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டார்.
அதிபர் சேவை இரண்டைச் சேர்ந்த இவர் அரபா வித்தியாலயத்திலும், அல்.முனீறா.பெ.உ.பாடசாலையிலும்; பிரதி அதிபராகக் கடமைபுரிந்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரியும், திறந்தபல்கலைகக்கழக பட்டமேற்கல்வி டிப்ளோமாதாரியுமாகிய இவர் ஒலுவில் அல்.ஹம்றா ம.வி, அல் இக்ரா வித்தியாலயம், அல்.முனீறா.பெ.உ.பாடசாலை போன்றவற்றில் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.
விசேடமாக புலமைப்பரிசில் தொடர்பான முதன்மை ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார். இவரிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபுரிந்துள்ளனர்.
அலுவலக அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் போன்றோரிடம் சிறந்த ஆளிடைத்தொடர்புகளைப் பேணிவரும் சிறந்த நிருவாகியாகிய இவரின் பணிதொடர வாழ்த்துகிறோம்.
இவர், இக்கல்லூரியின் முந்நாள் அதிபர் உமரலியார் ஆலிமின் பேரனும் ஓய்வுபெற்ற முகாமையாளர் அல்ஹாஜ் டி.கே.எம்.ஹனீபா, யு.எம் றசீதா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
வானம் மந்தாரக் குடைபிடிக்க பேண்ட் வாத்திய ஒலியுடன் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்தால் வரவேற்கப்பட்டமை ஒரு வரலாற்றுப்பதிவாகும்.

