கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்து பொதுமக்களின் எதிர்ப்பலையை நாடி பிடித்துப் பார்க்க அரசாங்கம் தீர்மானம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்து பொதுமக்களின் எதிர்ப்பலையை நாடி பிடித்துப் பார்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ரக்னா லங்கா ஆயுத பரிமாற்றம் தொடர்பில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் அடிப்படையில் கோத்தபாயவை கைது செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்படும் கோத்தபாயவை ஓரிரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்குள்ளாக நாட்டின் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பலைகளை அவதானித்து, அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறு பாரிய எதிர்ப்பலைகள் எழாத பட்சத்தில், அல்லது பொதுமக்களின் எதிர்ப்புகளை இலகுவாக சமாளிக்க முடியும் பட்சத்தில் முறைகேடுகளுடன் தொடர்புடைய ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை படிப்படியாக கைதுசெய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -