சிறுவர் ஊடாக சமாதானம் எனும் மாபெரும் வீதி ஊர்வலம்..!

சப்றின்-
க்கரைப்பற்று கல்விக் கோட்டத்தின் ஏற்பாட்டில், எஸ்.எச்.அட்வடைசிங் நிறுவனத்தின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சிறுவர் ஊடாக சமாதானம்' எனும் மாபெரும் வீதி ஊர்வலமும், கலை கலாசார நிகழ்வுகளும் நாளை 01ஆம் திகதி வியாழக்கிழமை அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் காலை 08.30 முதல் நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இக்பால் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் சமய, கலாசாரங்களை பிரதிபலிக்கும் நிழ்ச்சிகள் மேடையேற்றப்படவுள்ளன.

இந் நிகழ்வுகளில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவன பிரதானிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -