கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சி!

ஏறாவூர் நிருபர் ஏஏம் றிகாஸ், CM ஊடகப்பிரிவு-

கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

கிழக்கு மாகாண விவசாயிகள், பயிற்செய்கையாளர்கள், மீன் வளர்ப்போர், கால்நடை, கைப்பணியாளர்கள் ஆகியோர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இந்தக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் 19 ஆம் திகதிவரை காலை 9.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது. 

புதிய நெல் இனங்கள் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர்கள், விவசாய இரசாயன மற்றும் பசளை வகை, விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திர வகை, உயிர்வாயு உற்பத்தி, பாற்பண்ணை முகாமைத்துவம், கால்நடைத் தீவனம் மற்றும் புல் உற்பத்தி, கோழி வளர்ப்பும் முட்டை உற்பத்தியும், மீன்பிடி உபகரணங்களும் செயற்பாடுகளும், அலங்கார மீன் வளர்ப்பு முறைகள், கூட்டுறவுத்துறைச் செயற்பாடுகள், நவீன விவசாய நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள் என்பன இந்தக் கண்காட்சியில் இடம்பிடித்திருக்கின்றன. 

மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வான இன்று பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , கெலர அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சர் கே.துரைராஜசிங்கம், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெத்தினம் உட்பட அரச அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -