ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்­டனம்...!

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்­கெ­தி­ரான குற்­றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கண்­டித்­துள்ளார்.

ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது;

ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி பதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்வாங்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த அறிக்­கை­யில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இலங்­கையின் முழு­மை­யான நீதி­மு­றையில் கேலிக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­த­நி­லையில் உள்ளக விசா­ர­ணையை மேற்­கொள்ள இலங்கை முழு­மை­யான தகு­தியை கொண்­டி­ருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் ஐ.நா.வின் பரிந்­து­ரையை ஏற்க முடி­யாது இதே­வேளை, சர்­வ­தேச சமூகம் இலங்கை தொடர்­பாக இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றமை வெளியாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -