முஹம்மட் ஜெலீல்,
முறையான திட்டமிடலின்றி பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட நிந்தவூர் பொதுச் சந்தை பற்றி இன்று நிந்தவூர் மக்களிடையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
நிந்தவூர் பொதுச் சந்தைக்கு மக்கள் செல்வதாயின் பிரதான வீதியை கடந்து செல்லும் சிரமத்துக்கு மத்தியில் நிந்தவூர் பொதுச் சந்தை அமைந்துள்ளமையினால் இச்சந்தைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்களின் வருகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வியாபாரிகள் கடும் நஷ்டத்துக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிந்தவூர் பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வியாபாரிகள் சிலர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வீதி 3ம், குறுக்குச் சந்தியில் சட்டவிரோதமாக தெரு ஓரங்களில் மரக்கறி, மீன் வகைகள் போன்றவற்றினை விற்பனை செய்துவருகின்றனர்.
இவ்விடத்தில் தொடர்ந்து விற்பனை செய்துவருவதினால் இதுவொரு சட்டவிரோதமான செயலென தெரிந்த நிந்தவூர் பிரதேச சபை அதிகாரிகள் அண்மையில் இத்தெருவோரங்களில் மரக்கறி, மீன் போன்றவற்றை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் தற்போது மீண்டும் இவ்விற்பனைகள் வழமையிக்கு திரும்பிவிட்டது இத்தெருவோர சந்தையை பெரும்பாலான மக்கள் ஆதரித்தாலும் இதற்கு பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்களும் எழுந்தவண்ணமேயுள்ளது.
மேலும் நிந்தவூர் பொதுச் சந்தையானது அனாதரவற்றமுறையில் வெறுச்சோடி கிடப்பதோடு அங்கு விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகள் தற்போது நிந்தவூர் பொது நூலகத்துக்கு முன்பாக கொட்டில்கள் இட்டு பொருட்களை விற்பனை செய்து பழைய சந்தையை மீண்டும் புதிதாய் உருவாக்கிவருகின்றார்கள்.