அப்துல் அஸீஸ்-
எதிர்வரும் 8ஆம் திகதி அனுஸ்டிக் கப்படவிருக்கும் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு இன்று கல்முனை றோயல் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இன் நிகழ்வில் எழுத்தறிவு தொடர்பான முக்கியத்துவம், பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் எழுத்தறிவுத்திறன் மேன்பாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் போன்றவைகள் தொடர்பாக அறிவூட்டப்பட்டது.
திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்தின் ஒருங்கிணைப்பிலும், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர் .எம்.சாலிஹ் தலைமையிலும் இடம்பெற்ற இதில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச் .முகமட் ஹனி, கல்முனை றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்சார், திவிநெகும திட்ட முகாமையாளர் எ.சி. அன்வர், திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, திவிநெகும வலய-வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் உட்பட பிரதேச செயலக உளவளத்துனையாளர்களான ஏ .ஆர் .தஹ்லான், ரினோஸ் ஹனிபா ஆகியோர்கள் அதீதிகளாகவும், வளவாளர்கலாகவும் கலந்துகொண்டனர்.


