க.கிஷாந்தன்-
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா கிளாரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் 24.09.2015 அன்றுவியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பெய்த கடும்மழை காரணமாக குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆற்றுநீர் பெறுகெடுத்ததால் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் 15 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். பெய்த மழை காரணமாக பெறுமதி மிக்க சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இதே வேளை குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கூரைத்தகடுகள் சேதமடைந்து காணப்படுவதால் மழைநீர் வீட்டினுள் வடிவதாக இவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.