புனித நகரான மக்காவுக்கு அருகே மினாவில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த்வர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாகவும் 815 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக, அரப்நியுஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 1 மில்லியன் மக்கள் இன்று மக்காவுக்கு சென்றிருந்ததாகவும் சனநெரிசலில் நசுங்குண்டே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனித மக்கா பள்ளிவாசலிலிருந்து 5 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மினாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டடோரை மீட்கும் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவும் மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்ற
அதேவேளை உயிரிழந்தோரில் அதிகமானோர்
ஆபிரிக்கா, சவூதி அரேபியா மற்றும்
ஈரானை சேர்ந்தவர்கள் என மேலும் தெரிய வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -