முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
பூர்த்தியாகின்றன.இவர்கள் வெளியேற்றப்பட்டபோது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியகட்சி அதனைத்தடுக்கத் தவறிவிட்டது.அக்காலகட்டத்தில் சர்வதேச நிறுவனங்களோ,ஊடகங்களோ ,மனிதவுரிமை அமைப்புக்களோ இம்மக்களுக்காக குரல்கொடுக்கத் தவறிவிட்டன.இன்று சிறுசிறு சம்பவங்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமை அமைப்புக்கள் ஏன்?,, ஷவசிக்கும் உரிமை பறிக்கப்பட்டு வடக்கிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினையை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்க்கின்றனர்.|
பிரேமதாச அரசு,சந்திரிக்க அரசு.மஹிந்த அரசு என்பன இம்மக்களின் விடயத்தில் தோல்விகண்டுள்ளன.நல்லாட்சி எனும் திருநாமத்துடன் ஆட்சிக்கதிரையில் அமர்ந்துள்ள புதிய அரசு இம்மக்களின் கால் நூற்றாண்டுப்பிரச்சினையைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது.
இம்மக்களை மீள் குடியேற்றுவது என்பது வெறுமனே வடக்கே கொண்டு சென்று தகரக்கொட்டில்களில் அமர்த்துவதல்ல.ஷஅமைச்சர் றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது தம்சமூகத்தை மீள்குடியேற்றும் சூழலை வடபுல களநிலைமை அவருக்கு சாதகமாக இருக்கவில்லை|.அவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தோருக்கு களநிலைமை சாதகமாக இருந்தும் மீள்குடியேற்ற விகிதம் பெரிதாக போற்றும் அளவுக்கு இருக்கவில்லை.
வீடமைப்பும், மீள்குடியேற்றமும் ஒன்றுடன் பிணைந்துள்ளது.வீடுகள் இல்லையென்றால் மீள்குடியேற்றம் நிகழாது.வடபுல முஸ்லிம்களின் வீடுகளை இயற்கை அழிக்கவில்லை.திட்டமிட்ட மானிடக்குழுவே முஸ்லிம்களின் வீடுகளைத்தேடித் தேடி அழித்துள்ளது.
வீட்டுமரங்கள், கதவுகள், யன்னல்கள், ஓடுகள், வீட்டுக்கட்கள் யாவும் அகற்றி விற்கப்பட்டுள்ளன.முசலிப்பிரதேசத்தில் வீடுகளின் அடித்தளங்கள் மட்டும் காட்சி தந்தன. மலசலகூட பேசின்களும் அகற்றப்பட்டிருந்தன. நிலைமை இப்படி இருந்தும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு மீள்குடியேறும் மக்களுக்கான வீடமைப்பு விடயத்தில் மன்னார் மாவட்டத்தை புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நிலைமைகளை நேரில் சென்று யு.என் பிரதிநிதிகள் பார்வையிடவேண்டும். அமைச்சர் றிசாத் முஸ்லிம் நாடுகளோடு தொடர்புகொண்டு வீடுகளைப்பெற்றுக்கொடுத்து வருகிறார். இவரின் நற்பணிக்கு வீடமைப்பு அமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
விசேடமாக சொல்லப்போனால் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் சகோ. ஹிஸ்புல்லா அவர்கள் வடபுல முஸ்லிம் கிராமங்கள் அனைத்தினதும், தேவைகளையும், நிலைமைகளையும் பலமுறை களவிஜயம் செய்து அறிந்தவர். ஆகவே, அவருக்கு ஒரு பெரும் கடமை அவரைச்சாருகிறது. நிலைமைகளை பொறுமையாக இருந்து பார்ப்போம்..
நாம் வெளியேற்றப்பட்டு கால் நூற்றாண்டு (25 வருடம்) நினைவுதினத்தை அமைதியான முறையில் நினைவுகூருவோம். எமக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதியை தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியிலும் எதிரொலிக்கக்கூடியதாக உரத்துக்குரல் கொடுப்போமாக.
வடபுல முஸ்லிம்களின் 25 வருட (வயது) பிரச்சினை தீர்க்கப்படுமா..?
