ஹிஸ்புல்லாஹ்வை தேசிய பட்டியலில் இருந்து நீக்கவும்: ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் NFGG ஆர்பாட்டம்

டந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 

இப்பேரணி, இன்று காலை பத்து மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றது. 

இந்தப் பேரணியில் கொழும்பு மற்றும் அதனைச்சூழவுள்ள பல இடங்களையும் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் ஆதரவாளர்களினால் நேற்றைய தினம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களைக்கண்டித்து தமது கண்டன அறிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது. திருகோணமலையில் நடைபெரும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ள காரணத்தினால், இக்கண்டன அறிக்கையினை உடனடியாக அவரிடம் சமர்ப்பிப்பதற்கான உத்தரவாதத்தினை ஜனாதிபதி உயர் அதிகாரிகள் வழங்கியிருந்தனர். 

அத்துடன் ஊடகங்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இவ்வன்முறைச்சம்பவங்கள் குறித்த தமது கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளதுடன் தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

மக்கள் தொடர்ந்தும் அமைதியினைப் பேண வேண்டுமென NFGG மக்களைக் கேட்டுக்கொள்கின்றது. அத்துடன் இப்பேரணியில் கலந்து கொண்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும், ஊடக ஒத்துழைப்பை வழங்கிய ஊடகவியலாளர்களுக்கும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -